ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் தேர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சியில் மாணவர்களை தேர்வு செய்ய தேர்வு நடந்தது.
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாணவர்களை தூத்துக்குடி லெப்டினன் கர்னல் சுனில் உத்தம் உத்தரவின் பேரில் ஹவில்தார்கள் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 25 மாணவர்களை புதிதாக தேர்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் உலக யோகா தினத்தில் யோகா பயிற்சியில் கலந்து கொண்ட என்.சி.சி மாணவர்களுக்கு யோகா சான்றிதழ்களை ஹவில்தார்கள் வழங்கி மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் இசக்கிமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. பொறுப்பாசிரியர் மாணிக்கம் ஏற்பாடு செய்திருந்தார். தலைமை ஆசிரியர் முத்துசிவன் நன்றியுரையாற்றினார்.


