சாத்தான்குளம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள புளியங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சிவகுமார் (29) உள்பட 5 மகன்கள். இவர்களில் 4 பேருக்கு திருமணமான நிலையில் சிவகுமாருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். அவருக்கு மனவளர்ச்சி சற்று குறைபாடு காரணமாக திருமண வரன் அமையவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சிவகுமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தாமோதரன், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


