ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி கட்டிடத்தில் வைத்து நடந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.
மாணவிகளின் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் காவல்துறையினர் அயராது பாடுபட்டு வருகிறோம் பெண்கள் வாழ்வில் முன்னேற தங்களை தாங்களே பாதுகாத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என பேசினார். கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் பெண் ஆண் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சுய உதவிக்குழு மற்றும் குழந்தை காப்பகங்களில் விழிப்புணர்வு நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


