தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் நல்லகண்ணு 57 வயதான இவர், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இன்று வழக்கம்போல் தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிக்க வலையை போட்டுவிட்டு திரும்பும்போது எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இவர் மீன்பிடிக்க ஆற்றுக்கு சென்று வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் தேடி பார்த்துவிட்டு தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் படகு மூலம் தாமிரபணி ஆற்றில் ஆழமான பகுதியில் தேடி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் இசக்கி தலைமையில் முத்துக்குமார், சிறப்பு நிலை அலுவலர் ஜேசுபால், ஞானதுரை, மற்றும் பணியாளர்கள் மீட்டெடுத்தனர்.
போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


