வட வல்லநாடு, முறப்பநாடு பகுதிகளில் 25.50 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம், பயணிகள் நிழற்குடை, மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உறிஞ்சிகிணறு திட்டப் பணியை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடவல்லநாடு, முறப்பநாடு, பகுதிகளில் 2021&22 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாணல்காட்டான்குளத்தில் 5.5 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, முறப்பநாடு புதுக்கிராமம் ஊராட்சியில் 8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம், மற்றும் முறப்பநாடு கோவில்பத்து ஊராட்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 12 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சி கிணறு அமைக்கும் பணி போன்ற திட்ட பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, ஒன்றிய பொறியாளர் சித்திரை சேகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட சிறுபான்மை நலபிரிவு துணை அமைப்பாளர் கலீலூர் ரகுமான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார்,துணைச் செயலாளர்கள் பக்கப்பட்டி சுரேஷ், வீரபாகு விவசாய அணி துணை அமைப்பாளர் நேரு, பஞ்சாயத்து தலைவர்கள் பேபி சங்கர், விஜயகுமார், பொன்ராஜ், ஜெயபாரதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


