லித்துவேனியா , முறைப்படி லித்துவேனியக் குடியரசு, வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.


