செய்துங்கநல்லூரில் கடந்த 2009 வருடம் துவங்கிய மழலையர் பள்ளி பள்ளி ஜோஸ் மெடரிக் மற்றும் மழலையர் பள்ளி பள்ளி. இந்த பள்ளி முதலில் செய்துங்கநல்லூரில் வாடகை கட்டிடத்தில் துவங்கி தற்போது உள்ளூர் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தரமான கல்வி தந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார் குளத்தில் இப்பள்ளி சொந்த கட்டிடத்துடன் வெற்றி நடைபோடுகிறது. இதற்கிடையில் 8 வது வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி மட்டுமே செய்துங்கநல்லூரில் மாணவர்கள் பயின்று வரக் கல்வி நிறுவனங்கள் இருந்தன. எனவே இப்பகுதியில் ஆங்கில வழிக் கல்வியோடு முதல் முதலாக 10வது பொதுத் தேர்வு எழுதும் பள்ளியாக ஜோஸ் பள்ளி வளர்ந்துள்ளது. ஜோஸ் பள்ளியில் 10வது பொது தேர்வுக்காக 10 மாணவ மாணவிகளைத் தயார் செய்து வந்தனர். தற்போது நடந்த 10வது வகுப்பு பொதுத்தேர்வில் இங்குள்ள 10 மாணவர்களும் தேர்ச்சி பெற்று. பள்ளி முதல் முதலில் பொதுத் தேர்வு எழுதி சென்டம் சேர்ந்துள்ளனர். இதற்காக பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி, ஆசிரியர்கள், மாணவர்களைப் பள்ளி நிர்வாகி ஓ.பி. முஸ்தபா இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மற்ற நிர்வாகிகளாக, ரகுமத், செய்யது முகமது மைதீன் ஆகியோரும் இவர்களைப் பாராட்டினார்கள்.


