தூத்துக்குடி மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமுதாயத்தில் மிகப்பெரிய துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இவ்விருதுதினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து துறையில் உள்ள பெண்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை 25.06.2022 மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு,
தூத்துக்குடி – 628 001
தொலைபேசி எண் : 0461-2321149


