தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சம உரிமை திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஊரக வாழ்வாதரா இயக்க திட்ட இயக்குநா் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் மற்றும் துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை சாா்பில், அனைத்து வகையான 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளாா்கள். மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி பெறவும் தோ்வு செய்யப்பட உள்ளாா்கள். எனவே, பயிற்சியை மேற்கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயனடையுவும், மேலும் விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


