கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகன ஊர்தியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை அரசு உயர்நிலைப்பள்ளி இலாயல் மில் காலனி, இல்லத்தார் நடுநிலை பள்ளி வ.உ.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹரிதா பப்ளிக் பள்ளி, ஊ.ஒ.தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கப்பலோட்டியத் தமிழன் வ.உசிதம்பரனார் அவர்களின் 150- வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி / கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக்கண்காட்சி அமைத்திட வேண்டும் என்ற அறிவிப்பிற்கிணங்க செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வாயிலாக குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்தில் அன்னாரது வாழ்க்கை வரலாற்றினை புகைப்படக்கண்காட்சியாக வடிவமைத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளில் நகரும் புகைப்படக்கண்காட்சி நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 06.06.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், முன்னிலையில் தொடக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து இன்று கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இலாயல் மில் காலனி, இல்லத்தார் நடுநிலை பள்ளி வ.உ.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹரிதா பப்ளிக் பள்ளி, ஊ.ஒ.தொடக்கப்பள்ளி, கீதாஜீவன் கல்லூரி, கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கீதாஜீவன் கல்லூரி முதல்வர் இளங்குமரன், கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோசப் சார்லஸ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், வ.உ.சி. அவர்களின் வாரிசுதாரரும், கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உ.செல்வி, இலுப்பையூரனி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம், வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி, கிராம அலுவலர், கோவில்பட்டி வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


