திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், நம் தாமிரபரணி, கோபாலசமுத்திரம் கிராம உதயம், சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை இணைந்து மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி நடைபெற்றது. உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு மரக்கன்றுகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு, பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உருவாக்க தமிழக அரசு திட்டமான மஞ்சப்பை வீடு வீடாக வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு நம் தாமிரபரணி பொறுப்பாளர் நல்லபெருமாள் தலைமையில் நடைபெற்றது, வந்திருந்தவர்களை சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் முனைவர் கவிஞர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்வில் பசுமை திண்டுக்கல் அமைப்பாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, பெட்காட் இந்தியா தலைவர் செல்வராஜ் உதவும் உள்ளங்கள் ராம்குமார், மேஜிக் பஸ் நதிரா, உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் பொறுப்பாளர் வித்யா சேகர்,நல் நூலகர் முத்துகிருஷ்ணன், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்.கந்தசாமி ,முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


