தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் , பள்ளி தலைமை ஆசிரியர், துறை வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர் , ஊராட்சி செயலாளர் , கிராம உதவியாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் . விழாவில் 51 மரக்கன்றுகள் நடப்பட்டது . தொடர்ச்சியாக செகாகாரக்குடி ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் செய்து இருந்தார்.


