வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் சுவாமியின் 41 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதையட்டி அதிகாலை முதல் அகவல் பாராயணம் பாடப்பட்டது. இரவு அருள்ஜோதி ஆனந்த சபை மண்டபத்தில் 1008 தீபம் நவக்கிரக வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தொண்டர் குலத்தினர் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


