முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் செய்துங்கநல்லூரில் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பின்பு பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கருங்குளம் சத்திரம் பகுதியில் திமுக கொடியை ஏற்றி வைத்து கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, துணை செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பு துணைச் செயலாளர் கலீலூர் ரகுமான், மாவட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் அவைத் தலைவர் பட்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வேல் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர் முத்துபாண்டி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன்,ஒன்றிய கவுன்சிலர்கள் அப்துல் கரீம், வசந்தி முருகன், சின்னத்துரை, பஞ்சாயத்து தலைவர்கள் ஸ்ரீரங்கன், சேக் அப்துல் காதர், கொம்பையா, முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன், கிளைக் கழகச் செயலாளர்கள் முத்துச்சாமி, சுடலைமணி, முருகேசன், சங்கரபாண்டி, அருண்குமார், துரைராஜ், கலாநிதி, பட்டி முருகன், சித்திரை ,பூல் பாண்டியன், ராமச்சந்திரன், உட்பட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


