ஸ்ரீவைகுண்டம் அருகே சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க வேண்டும் என அங்கு குடியிருக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சமத்துவபுரம் உருவாகிய 1998-ம் ஆண்டு முதல் குடியிருந்து வருகிறோம். தமிழ்நாடு அரசு 100 பயனாளிகளுக்கு 100 வீடுகளும் மற்றும் சமூதாயக்கூடம், நியாயவிலை கடை, சிறுவர் பூங்கா எல்லா வசதிகளுடன் எல்லா பயனாளிகளையும் அமர வைத்தது. சுமார் 1998 முதல் இன்று வரை 70 சதவீதம் மக்கள் குடியிருந்து வருகிறோம் மற்றும் 30 சதவீதம் பஞ்சாயத்தால் தேர்ந்தெடுத்து குடியிருந்து வருகிறோம்.
25ஆண்டுகளாக இந்த வீடுகளில் எந்த பழுதும் பாக்கப்படவில்லை. 100 வீடுகளும் 80 சதவீதம் பழுதாகியுள்ளது. குடும்பத்துடன் வீட்டில் இருக்கவே பயமாக உள்ளது. தற்பொழுது 30 சதவீதம் வீடுகள் மட்டுமே பழுது பார்த்து தருவதாக அறிந்தோம். இந்த திட்டம் எங்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆகவே அரசு ஒதுக்கிய நிதியில் 100 வீடுகளையும் பழுது பார்க்க வேண்டும், தெருவில் உள்ள சாலைககளை சீரமைக்கவும், தனிபட்டா, தனி பெயரில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுடம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


