கருங்குளம் அருகே கிராமத்தை பாதிக்கும் கல்குவாரியை குவாரியை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் கிராமத்தின் கீழ்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கல்குவாரி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் கிரஸர் மட்டும் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் கல்குவாரி அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கல்குவாரியில் நீர் தேங்கி உள்ளதால், புதிதாக ஊரின் அருகில் கல் குவாரி ஒன்றை அமைத்துள்ளனர். இந்த குவாரி தற்போது தொடங்கி உள்ள நிலையில் குவாரியில் வெடி வெடிக்கும் போது, அங்கிருந்து கற்கள் ஊரின் அருகில் விழுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளர். அருகில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த ஊர் பக்கத்திலேயே தார் பிளாண்ட் தொடங்கும் ஆயத்தப்பணிகளும் நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அரசர்குளம், வல்லகுளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தின் அருகே புதிதாக கல்குவாரி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கிராமத்திற்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். தற்போது அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியில் இருந்து கிராமத்திற்கு 200 மீட்டர் தொலைவிலும், ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான இடுகாட்டிற்கு 50 மீட்டர் தொலைவிலும், போக்குவரத்து சாலைக்கு 50 மீட்டர் தொலைவிலும் இந்த கல்குவாரி அமைவதால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாது. மேலும் எங்கள் ஊர் பக்கத்திலேயே தார் பிளாண்ட் தொடங்கும் ஆயத்தப்பணிகளும் நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது என அவர்கள் அந்த அனுமவில் தெரிவித்துள்ளனர்.


