தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்ட , நிலத்தடி நீரை பாதுகாக்க, புயல் சூறாவளி, மண்ணரிப்பைத் தடுக்க ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து பாடுபட்டு வரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனத் தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களின் சேவையை பாராட்டி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி ஸ்வர்ணலதா அவர்கள் விருது வழங்கி, பாராட்டி, கௌரவித்தார்கள். விழாவில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்


