சாத்தான்குளத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகையை மோசடி செய்த அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அபு மனைவி ஜாஜிதா (57). இவர் தனது உறவினராக அதே தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் முகம்மது யூசுப் ஹக்கிம் (47) என்பவரிடம் விவசாய லோன் வாங்குவதற்காக 15 பவுன் நகையை கொடுத்தாராம்.
அவர் வங்கியில் நகைகளை அடகு வைத்து பின்னர் திருப்பித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் நகையை திருப்பி கொடுக்கவில்லையாம். இதுகுறித்து ஜாஜிதா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து முகமது யூசுப் அகிமை தேடிவருகிறார்கள்.


