கர்த்தருடைய நாம மகிமைக்காக ஆலய பணியில்
ஓடி முடித்தோர்:
– S.ஆசீர்வாத நாடார் – [1988]
ஆரம்ப கால சபை மிகுந்த நெருக்கப்பட்ட காலத்தில் பலபிரச்சனைகளை எதிர் காண்டு ஜாதி, மத மோதல்கள் பலவற்றில் சோர்ந்து போகாமல் சபை நடைபெற மிகவும் காரணமாக இருந்தவர். பல ஆண்டுகள் சேகர கமிட்டி உறுப்பினராகவும் ஆலய நிர்வாக பொறுப்புகள் பலவற்றிலும் மகிமையாக வாழ்ந்து ஓட்டத்தை முடித்தார்.
2.G. லாசர் டேவிட் (எ) பெருமாள் நாடார் – [2005]
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பக்தி வைராக்கியமாக வாழ்ந்தவர். சபையிலும், கிராமத்திலும் யாவரோடும் சமாதானமாய் வாழ்ந்தவர். சபையில் இருந்து ஏக மனதாக பல ஆண்டுகளாக சேகர கமிட்டி உறுப்பினராக இருந்தவர். ஆலய ஆராதனையில் தினமும் பங்கு பெறுபவர். சபை வீடுகளில் நடக்கும் எல்லா காரியங்களிலும் முன்னின்று செயல்படுபவர். நமது சபை நூற்றாண்டு வரலாற்றில் முதன்முதலாக சபையில் இருந்து மரித்தவர்களுக்கு செய்யப்படும் அடக்க ஆராதனையில் இறுதி மரியாதை என்று இப்போது வரை செய்யப்படும் ஒழுங்கு முறமையை பெற்ற முதல் சபையார் இவர் ஆவார்.
3.A.ராஜாமணி ஆசிரியர் – [2008]
குடும்பமாக ஆலயத்தில் ஊழியம் செய்து. 30 வருடங்களாக சபை ஊழியராக இருந்து, சபை விசுவாசிகளுக்கு மாதிரியாக வாழ்ந்து, ஜெபம், உபவாசம், ஏழை எளியவர்களுக்கு உதவி,விசுவாசம் என்று எல்லா வகைகளிலும் வாழ்ந்து காட்டி, தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தி வாழ்ந்து முடித்தார்.
4.P.வின்சென்ட் டேனியல் -[2016]
சிறுவயது முதல் பக்தி வைராக்கியமாக வளர்ந்து இளம் வயதில் ஆலய பராமரிப்பு பணிகளை செய்து வாலிப வயதில் கர்த்தருடைய ஊழியத்தை செய்தவர். தினசரி ஆலய ஆராதனை நடத்தி சபையார் யாவரிடமும் ஐக்கியமாக இருந்தவர். தேவனுடைய மகிமைக்காக ஆலயத்தில் பல பணிகளை செய்தவர்.
5.P.சாமுவேல்பால் ஆசிரியர்-[2021]
ஆசிரியர் பணியின் நிமித்தமாக நமது திருமண்டல பள்ளிக்கூடங்களில் பணி செய்தவர். சில சபைகளில் சபை ஊழியராக பணி ஒய்வுக்குப்பிறகு நமது சபையில்ஆராதனை நடத்தி தேவனுடைய செய்தியைக் கொடுத்து சிலுவை தியானம் நடத்தி தேவனுடைய நமத்தை மகிமைப்படுத்தினார்கள். ஆலய நிர்வாகப் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டார்கள். முதிர் வயதிலும் ஆலய வாஞ்சையிலும் வாழ்ந்து முடித்தார்.


