ஆழ்வார்திருநகரி அருகே மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மணல்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மகேஸ் புதியவன் (19). இவர் 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மகேஸ் புதியவனை கைது செய்தார்.


