பட்டியலின மற்றும் பழங்குடியின பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதன்மை திட்ட கருத்தரங்கை துவக்கி வைத்த திருவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் டி வெங்கடேசன் சமூக வலைதளங்களில் மாணவர்கள் மூழ்கி கிடக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு முதன்மை திட்ட கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பூரில் சமுதாய நல கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கருத்தரங்குக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார். அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பா. பானுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் என். பாலமுருகன் முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டியலின மற்றும் பழங்குடி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது தற்போதைய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களில் அதிகமான நேரத்தை செலவழிக்கிறார்கள்.சமூக வலைதளங்கள் மூழ்கி கிடப்பது மட்டுமல்லாமல் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஒருவர் படித்து முன்னேறினால் தொடர்ந்து அடுத்த தலைமுறையே முன்னேறும். மாணவர்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும். சரியானதை செய்ய வேண்டும். தெரியாமல் தவறு நடந்துவிட்டால் அதை ஏற்றுக்கொண்டு தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஒரு தவறை மறைப்பதற்கு பல பொய்களை சொல்லக்கூடாது. பொய் சொல்வதற்கு கூச்சப்பட வேண்டும்.உண்மையை பேசுகிறவன், உண்மையை சொல்கிறவன், உண்மையை செய்கிறவன், எப்போதும் எங்கும் துணிந்து நேர்மையுடன் வாழ முடியும், தாய், தந்தை, ஆசிரியரை மதிக்க வேண்டும், நன்றியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது நன்றி உணர்வோடு வாழ்கிறவன் என்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என கூறினார்.அதனைத் தொடர்ந்து 500 மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார் இதில் திருச்செந்தூர் கோட்டம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் லெனின் மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன், சென்னை ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையம் சிறப்பு ஆசிரியர் சோபியா வாணி, இயல் முறை மருத்துவர் எம் சி கே வெற்றிவேல் ராஜாஆகியோர் கருத்துரை வழங்கினர்.முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார் இதில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பள்ளி கல்லூரி மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாபானுப்பிரியா பாலமுருகன் சிறப்பு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
Attachments area


