பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருநை கடந்து வந்த நாகரிகங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
கல்லூரியின் லெபோ அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவர் ஜெனி ஆண்டனி வரவேற்று பேசினார் . நிகழ்ச்சியை இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவி பானுமதி தொகுத்து வழங்கினார் . பொருநை கடந்து வந்த நாகரிகங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இக்னேஷியஸ் சேவியர், ஒருங்கிணைப்பாளர் முனைவர் முருகன், பொறுப்பாசிரியர் முனைவர் டெய்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சகாய ஆன்றோ ஜாய் ரோஷன் நன்றி கூறினார்.


