கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021 -22 ன் கீழ் கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அனைத்து துறை ஒருங்கிணைப்பு சிறப்பு முகாம்கள் சேரகுளம், செய்துங்கநல்லூர், வல்லகுளம் மற்றும் கீழவல்லநாடு ஊராட்சி மன்றங்களில் நடந்தது.
விவசாயிகள் கடன் அட்டை பயிர்காப்பீடு, பட்டா மாற்றுதல், குளத்தில் கரம்பை மண் எடுத்தல் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பழனிவேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குநர் கருங்குளம் இசக்கியப்பன், கால்நடை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வல்லகுளம் பஞ்சாயத்து தலைவர் கமலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேரகுளம், கீழவல்லநாடு ஊராட்சிகளில் நடந்த முகாம்களில் வேளாண்மை அலுவலர் காயத்ரி, துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாம்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் நுண்ணூட்ட சத்து மாத்திரைகள் கால்நடை மருத்துவத்துறையினரால் வழங்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து குளத்து வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பங்கள், கிஸான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இக்கிராம ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட முகாம் 07.06.2022 அன்று நடைபெறவுள்ளது. அச்சமயம் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம்களுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ரகுநாத், வெங்கடேஷ், நூர்தீன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் முரளிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
இம்முகாம்களில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


