தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் துறை ஆய்வாளராக ஸ்டிபன் ஜெபராஜ் பொறுப்பேற்று உள்ளார். இவரை பல்வேறு அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு பரமசிவன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சே.நங்கமுத்து , கருங்குளம் ஒன்றிய பொது செயலாளர் பி.பேச்சி, மாவட்ட வழக்கறிஞர் ந.சுப்பிரமணியன் , சமூக ஆர்வலர் தங்கராஜ்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


