தூத்துககுடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு செந்தில்ராஜ் ஆலோசனைப்படி அறிப்படாத சுதந்திரப்போராட்ட தியாகிகளை கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் முயற்சியின் ஒரு பகுதியாக மாவட்ட டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் 26 முக்கிய நபர்களை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகம் காட்சி படுத்தியுள்ளது. இதற்கிடையில் மத்திய கலச்சார அமைச்சக ஆலோசகர் பர்மா தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரபோராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு செய்தார். அவர் குலசேகரபட்டினம் லோன் துரை கொலை செய்யப்பட்ட இடம், உப்பளம், திருச்செந்தூர் தியாகிகள் நினைவு சின்னம், திருச்செந்தூர் வட்டாரத்தில் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் கல்வெட்டு, ஆறுமுகநேரி கோசல்ராம் சிலை மற்றும் அவர் கல்லறை, ஆறுமுகநேரி பேருராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் பட்டியல், தியாகிகள் ஆலோசனை நடத்திய தியாகி தங்கவேல் நாடார் வீடு, அவரின் நினைவு கொடிகம்பம் உள்பட பல பகுதிகளை பார்வையிட்டனர். அவருடன் சென்னை கலாசேத்திரா இயக்குனர் ரேவதி ராமசந்திரன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தியாகி வாரிசு முனைவர் தவசி முத்துமாறன், ஜெயந்தி நாதன், துணை தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், பள்ளி பத்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


