செக்காரக்குடி கிராமத்தில் விவசாயிகள் கடன் அட்டை மற்றும் பயிர்க்காப்பீடு திட்ட முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை மற்றும் பயிர்க்காப்பீடு திட்டம் சம்பந்தமான முகாம் செக்காரக்குடி கிராமத்தில் இந்த முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் முகாமில் விவசாயிகள் கடன் அட்டை திட்டம் சம்பந்தமான மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். தூத்துக்குடி மாவட்ட பயிர்க்காப்பீட்டு திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மார்ட்டின் ராணி கலந்து கொண்டு முகாமில் பயிர்க்காப்பீடு விழிப்புணர்வு மற்றும் பயிர்க்காப்பீடு திட்டம் சம்பந்தமாக விளக்கமாக எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் கருங்குளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு மானியதிட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
ஐஎப்சிஓ டோக்கியோ பயிர்காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டு துண்டுபிரச்சுரம் வழங்கினர். பொதுச் சேவை மைய நிறுவனர் முத்துக்குமார் கலந்து கொண்டார். விவசாயிகள் 40 பேர் முகாமில் கலந்து கொண்டனர். முகாமின் முடிவில் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றியுரை கூறினார்.
ஏற்பாடுகளை தெய்வசெயல்புரம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருவேணி செய்திருந்தார்.


