இன்று சித்திரை புத்தாண்டு, குரு பெயர்ச்சி, அதுவும் வியாழக்கிழமை. குருபகவானுக்கு உகந்த நாள். தொடர்ந்து பிரதோஷம். சிறப்புக்கு மேல் சிறப்பான நாள். இந்த நாளில் வருடந்தோறும் தாமிரபரணி ஆற்றில் நடத்தும் புஷ்கர திருவிழாவை காலையில் 7 மணிக்கு முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் அம்மன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் நதிக்கு பூஜை நடத்தினோம். அடுத்து வருடந்தோறும் என் ஆதரித்து அரவணைக்கும் தோரணமலை முருகன் கோயிலுக்கு சென்று 10 பேருக்கு தோரணமலையான் விருது வாங்கி கொடுத்தேன். நிர்வாகி செண்பகராமன் அய்யா என்னை வாழ்த்த வேண்டும் என்பதில் கவனமாய் இருந்து முருகனின் படத்தினை பரிசாக கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அதோடு மட்டுமல்லாமல் என் சிஷ்யன் சுடலைமணி செல்வனுக்கு விருது கொடுத்து மகிழ்வித்தார்கள். மிக்க நன்றி அய்யா. தங்கள் தந்தை விட்டு சென்று அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள். தோரண மலை முருகன் உங்களோடு இருக்கிறார். நிச்சயம் நல்ல முறையில் வழி நம் அனைவரையும் வழிநடத்துவார். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


