நெல்லை தினகரன் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றி, அதன் பின் நெல்லை தமிழ் முரசு திருநெல்வேலியில் ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியராக பணியாற்றியவர் எழுத்தாளர் நெல்லை வரதன் அவர்கள். அவர் இன்று (15.04.2022) மதியம் 3 மணிக்கு பாளை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார். அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை பாளையங் கோட்டையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு அவரது மகன் வ. நந்தகோபால் & 8015457725
நெல்லை வரதன் காலத்தில்தான் திருநெல்வேலியில் பல எழுத்தாளர்கள் உருவானார்கள். அதில் நானும் ஒருவன் என்பது பெருமை. நான் இன்று பெரிய எழுத்தாளராக உருமாறி இருக்கிறேன் என்றால் அய்யா எனக்கு தந்த வாய்ப்புத்தான். 10க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். நெல்லை வானொலியில் நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே காணம் என்னும் கிராமத்தினை சேர்ந்த இவர், பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது காலமாகி விட்டார். அவரை பிரிந்து வாடும் மகன் மற்றும் மகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


