செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சித்திரை விசு திருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலை திருவரங்கசெல்வி யம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாட கிளம்பினார். அவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டுபின் செய்துங்கநல்லூர் அன்னதான சந்திரம் வந்தடைந்தார். வரும் வழியில் கீழத்தூதுகுழி, மேலத்தூதுகுழி பகுதியில் அம்மனை பக்தர்கள் வணங்கி நின்றனர். பின் இரவு சப்பரத்தில் ஊர் பவனி வந்தார். அன்னதானசத்திரம், தென்னஞ்சோலை, செய்துங்கநல்லூர் மெயின்ரோடு , கஸ்பா, வி.கோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலை அம்மன் வந்தடைந்தார். வரும் வழியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சண்முக சுந்தரம் கம்பர் தலைமையில் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


