தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன்கோயில் பிரசித்தி பெற்ற கோயில் . இந்த கோயிலில் சித்திரை புத்தாண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக விழாவில் நிகழ்ச்சிகள் தடைப்பட்டது. இந்த ஆண்டு இவ்விழா மிகச்சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு இறைபணியில் பொன்விழாகண்ட கே. ஆதிநாராயணன் நினைவு தோரண மலையான் விருது 2022 10 பேருக்கு வழங்கப்பட்டது. வள்ளி தேவயானி சமேத திருமுருகன் சப்பரத்தில் கோயிலை சுற்றி வந்த பின்பு விவசாய பொருள்களுக்கு தீபாரதனை காட்டி, நாடு மழை வளம் பெற வேண்டும் என முருகப்பெருமானை வணங்கி அதன் பின் விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியையட்டி விவசாயிகள் மூலமாக தொண்டுகள் புரிந்தவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது. சுதந்திரபேராட்ட வாரிசு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் தவசிமுத்து மாறன், இசை ஆசிரியர் இசக்கியப்பன், கோயில் திருப்பணியாளர் காசிமேஜர்புரம் சங்கரசட்டநாதன், சமூகசேவகர்கள் டெலிராஜா, கால்வாய் சிவா, ஆழிகுடி தினேஷ், நந்தினி, மேலபுத்தனேரி சுகன், கலியாவூர் பரமசிவன், தொலைகாட்சி நிருபர் சுடலைமணி செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.


