செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றில் குருபெயர்ச்சி மற்றும் புஷ்கர திருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. குணவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா நடந்தது. பூர்ண கும்பம் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின் தாமிரபரணிக்கு 21 அபிசேகம் நடந்தது. தொடர்ந்து பூர்ண கும்ப அபிசேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரி சக்தி விக்னேஸ்வரன், உதவியாளர் பாலகிருஷ்ணன், ஊர் பிரமுகர்கள் அங்கப்பன், முருகன், லெட்சுணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை , செந்தில் சகோதரர்கள் செய்திருந்தனர்.


