மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அற்ற தன்மை காணப்படுகிறது குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுவதற்காக ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம், சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவர் சோபியா, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார் இதில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், மேலும் குழந்தைகள், குழந்தைகளின் குடும்பத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், ரத்த சம்பந்தமான நெருங்கிய உறவுகள், தத்து எடுப்பவர், வளர்ப்பு பெற்றோர், ஒரே வீட்டில் வசிப்பவர்கள், பகிர்வு உடைய குடும்ப உறுப்பினர்கள், குழந்தையை பராமரிப்பது செய்யக்கூடியவர்கள் மற்றும் உரிமையாளர்கள், கல்வி, மத, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறை, இராணுவம் மற்றும் பாதுகாப்பு, வீரர்கள், நம்பிக்கைக்குரிய பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், குழந்தையுடன் அன்றாடம் தொடர்பில் இருப்பவர்கள், முற்றிலும் அறிமுகமான மற்றும் தெரியாத நபர்கள் இப்படி பல்வேறு தரப்பினராலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும். பாலியல் தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சட்டப்பிரிவுகள், இதற்கான தண்டனைகள், குழந்தை திருமணத்தில் ஏற்படும் பின்விளைவுகள், மேலும் குழந்தை திருமணத்தை பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதிபதி, குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு அலுவலர், சிறப்பு சிறார் காவல் அழகு, குழந்தைகள் நலக்குழு, கிராம நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து தலைவர், முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர் நீதிபதி, பள்ளி தலைமையாசிரியர், ஒன்றிய, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, சைல்டு லைன் (10 98) ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த யாருக்கு அதிகாரம் உண்டு என்பதையும், குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006, குழந்தைகளின் உரிமைகள், குழந்தை பாதுகாப்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும், எந்தெந்த சூழ்நிலைகளில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள், எந்தெந்த சூழ்நிலையில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் எதை புறக்கணிக்கிறார்கள், என்னென்ன செயல்பாட்டால் குழந்தைகளுக்கு மனரீதியாக தீங்கு இழக்கப்படுகிறது, எத்தகைய சூழலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உளவியல் மற்றும் சமூக (தலையீடுகள்) வழிகாட்டுதல்கள், குழந்தைகள் கடத்தல் பற்றியும், குழந்தை தத்து கொடுத்தல் பற்றிய நோக்கம், மத்திய தத்துவள ஆதார மையம், தத்தெடுத்தலுக்கான வழிமுறைகள், யாரெல்லாம் தத்தெடுக்கலாம். போன்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார். முன்னதாக தையல் பயிற்சி மாணவி மேரி ரேபோனி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ரிபான்சி நன்றி கூறினார். அனைவருக்கும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
போட்டோ செய்தி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் விழிப்புணர்வு பயிற்சி கையேடு வழங்கினார். அருகில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உள்ளார்


