செய்துங்கநல்லூரில் குருத்தோலை ஞாயிற்றையட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக குருத்தோலை ஏந்தி வந்தனர். செய்துங்கநல்லூர் புனித லூக் கா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை யட்டி சிறப்பு ஜெபம் நடந்தது. அதன் பின் ஆலய மக்கள் வரிசையாக குருத்தோலை பவனி சென்றனர். உபதேசியார் பென் மேத்யூ தலைமையில் மக்கள் ஊர்வலமாக சென்று பின் ஆலயத்துக்கு வந்தனர்.


