முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகங்களும் அறிக்கைகளும் என்ற நூல் அறிமுக விழா கொங்கராயகுறிச்சி கூட்டுறவு வங்கி வளாகத்தில் வைத்து நடந்தது. வங்கி தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய தெற்கு திமுக வட்டார செயலாளர் இசக்கி பாண்டியன், காங்கிரஸ் வட்டார தலைவர் புங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் நூலை வெளியிட ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்த ராஜ் நூலை பெற்று கொண்டார். நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர், சாத்தான்குளம் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


