வல்லநாட்டில் வனத்துறை தீயணைப்பு துறை கூட்டு தீ தடுப்பு மற்றும் வன உயிரின மீட்பு பயிற்சி பட்டறை நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் வன உயிரின மீட்பு வகுப்புகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மண்டல வன பாதுகாவலர் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், உதவி மாவட்ட வன அலுவலர் சக்திவேல், வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியன் பாரதி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வனக்களப்பணியாளர்கள் உள்பட 40 பேரும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் திருச்செந்தூர் நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் நிலைய அலுவலர்கள் தெர்மல் கோமதி அமுதா, ஸ்ரீவைகுண்டம் இசக்கி, தூத்துக்குடி சகாயராஜ், ஸ்ரீவைகுண்டம் முத்துக்குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கமண்டோ பிரிவு வீரர்கள் உள்பட 35 பேரும் இணைந்து வல்லநாடு வெளிமானங்கள் சரணாலய பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் நடைபெற்ற வன உயிரின மீட்பு வகுப்புகளில் மணிமுத்தாறு அகஸ்தியர் மக்கள் சார் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் தணிகைவேல், வினோத், சுபா, ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஷ்வரன் மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வன உயிரின மீட்பின்பாது ஏற்படக்கூடிய சிக்கல்களையும் சவால்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்றும், வன உயிர்களை மீட்பது போன்ற தகவல்களை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு வழங்கினர்.


