தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் பெருவிழா பேய்க் குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி வட்டார அளவிலான நடந்த விவசாயிகள் பெருவிழாவிற்கு வருகை தந்தவர்களை வேளாண்மை உதவி இயக்குனர் க.அல்லிராணி வரவேற்றார்.
பயிற்சியை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் எஸ் ஐ முகைதீன்துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் க. ஜெயசெல்வின் இன்பராஜ் உழவர்களுக்கான பயிற்சி மற்றும் பயிற்சி முறைகள் பற்றியும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் (பூச்சியியல்) முனைவர் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயன்பாடு,பயிர்களை பூச்சி நோய்கள் மேலாண்மை முறைகள் பற்றியும்,ஓய்வுபெற்ற மேலாண்மை கூடுதல் இயக்குனர் எம்எஸ் மகாதேவன் இயற்கை மற்றும் நுண்ணூட்ட வளங்கள் பற்றியும், ஸ்பிக் நிறுவன கே விக்னேஷ் மண் மாதிரி எடுக்கும் முறைகள் உரமிடுதல் முறைகள் பற்றியும்,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி பனை நிலத்தடி நீரை பாதுகாக்கிறது, விவசாயிகள் பனைமரங்களை விளைநிலத்தின் ஓரங்களில் வைத்தாள் வாழை, கொடிக்கால் போன்ற பயிர்களுக்கு அரணாக இருந்து புயல் சூறாவளி போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பனை மரங்களை நடுவதால் கரை உறுதிப்படுத்துவதோடு மண்ணரிப்பை தடுக்கிறது. விவசாய நிலத்தையும், விவசாய பயிர்களையும்,அரணாக இருந்து பனைமரம் பாதுகாக்கிறது .மேலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் மனித உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும், சுவை மிக்கதாகவும், மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது ஆகவே அனைவரும் பனையைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனக் கூறினார் .
இதில் கருங்கடல் ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பபுரம் காந்திமதி உட்பட விவசாயிகள் 120 பேர் கலந்து கொண்டனர் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆழ்வார்திருநகரி துணை வேளாண்மை அலுவலர் தங்க மாரியப்பன் நன்றி கூறினார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அட்மா திட்ட பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


