நன்றி – வணக்கம் மும்பை ஆசிரியர் – ஜெயஆசிர் அவர்கள்
இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக் கப்பட்ட பொருள்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சிக்கு இது கூடுதல் பெருமை சேர்த்தது. தொல்பொருள் தோண்டி எடுக்கப்படும் இடத்தை தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப் படுத்தியிருந்தனர். விளக்க விபரங் களும் இடம்பெற்ற இருந்தன. இந்த தொல்பொருள் அருங்காட்சிய அரங்கம் பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இது திருநெல்வேலிக்கு மிகவும் புதிதாகவே இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ரெட்டியார் பட்டி மலையில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இந்த மாதிரி அருங்காட்சியகம் முன்னோடியாக இருந்தது.
கடந்த புத்தக கண்காட்சியின் போது பேசிய அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் உதய சந்திரன், “அடுத்த ஆண்டு இங்கு ஆதிச்சநல்லூர் குறித்த நூல் பிரமாண்டமாக வெளியிடப்படும்” என பேசினார். ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு ஒரு படி மேலே போய் ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை மாதிரி அருங்காட்சியகத்தினையே ஏற்பாடு செய்து விட்டார். இதற்காக உதவியாக இருந்த தொல்லியல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், தொல்லியல் இயக்குனர் சிவானந்தம் ஆகியோருக்கும் நன்றி.
19.03.2022
நெல்லை வரலாற்றில் முதல் முதலாக காணி குறும் படம் மிக பிரமாண்டமாக மாவட்ட ஆட்சி தலைவர் வே. விஷ்ணு உருவாக்கியுள்ளார். இதற்காக அவரை பாராட்ட வேண்டும். இதற்கான நிகழ்ச்சி புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தலைமையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் பெருமாள் முன்னிலையில் தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் வெளியிடுகிறார்கள்.
பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும், அறிக்கைகளும் என்ற இந்த நூல் மிகவும் சிறப்பான நூலாக மலர உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
லெமுரியா ஆய்வு திரைப்படம் தயாரிக்கும் தாயாரிப்பாளர் டாக்டர் ரவீந்திரா அவர்கள் என்னை பார்க்க வந்திருந்தார். இவர் லெமுரியா கண்டத்தில் கடல் வழி ஆய்வு மற்றும் நில வழி ஆய்வு ஏற்படுத்த உள்ளார்கள். லெமூரியா கடல் மூழ்கிய பின்பு மனிதர்கள் வாழ்ந்த இடம் ஆதிச்சநல்லூர்தான் எனவே ஆதிச்சநல்லூரில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். விரைவில் ஆதிச்சநல்லூர் புகழ் பாட ஒரு திரைப்படம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டாக்டர் ரவிந்திரன் அவர்கள் ஆதிச்சநல்லூர் குறித்து ஆய்வு செய்ய வந்தார். அவருக்கு எனது ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13076/2017 என்ற நூலை கொடுத்தேன். விரைவில் ஆதிச்சநல்லூரில் படம் பிடிக்க வேண்டும் என்று கூறினார். எங்களோடு முனைவர் கந்தசுப்பு வும் இருந்தார்.
மொத்தத்தில் தாமிரபரணி கரை தொல்லியலுக்கு இது பொற்காலமாகும்.
“பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்” என்ற தலைப்பில் நான் எழுதிய நூல் வெளிவந்து விட்டது. இந்த நூலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களிடம் அறிமுகம் செய்த நல்லதொரு தருணம். இந்த நூல், தற்போது நெல்லை புத்தக கண்காட்சியில் 119 காவ்யா ஸ்டாலில் கிடைக்கிறது. ஆதிச்சநல்லூர் கடந்த வந்த பாதை, உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உருவான வரலாறு. நெல்லை பொருநை அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா, நெல்லை புத்தக கண்காட்சி (17.03.2022) துவக்க விழா, அருங்காட்சியகங்கள் பற்றிய கண்காட்சி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உருவாக உழைத்த வரலாறு, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் உள்ள அருங்காட்சியகம் உள்பட 1902 ல் இருந்து இதுவரை வந்த ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பற்றி அறிக்கைகள்(ஆங்கிலம் மற்றும் தமிழ்) இந்த நூலில் க்.யூ.ஆர். கோடு மூலமாக பார்க்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் பிச்சுமணி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் டாக்டர் அருண்ராஜ், எழுத்தாளர் லேனா தமிழவாணன் அவர்களுடைய வாழ்த்துரையுடன் இந்த நூல் வெளிவந்துள்ளது.
நெல்லை புத்தகண்காட்சியில், புத்தக கண்காட்சி துவக்க விழா செய்தியுடன் பரபரப்பாக விற்பனையில் உள்ளது இந்த நூல். வாங்கி படியுங்கள் . ஆதரவு தாருங்கள். (தொடர்ப்புக்கு 8760970002 அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு)
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவருக்காக நானும் என்மகன் அபிஷ்விக்னேஷ அவர்களும் இணைந்து அறியப்படாத சுதந்திர பேராட்ட வீரர்கள் குறித்து ஆவண படம் தயாரரிக்க ஏற்பாடு செய்தார்கள். நானும் சிஷ்யர் சுடலைமணி செல்வனும் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். என்னோடு புகைப்படம் எடுக்க ஆறுமுகநேரி, திருச்செந்தூர், குலசை, உடன்குடி, காயாமொழி, குரும்பூர், மெஞ்ஞானபுரம் உள்பட பல இடங்களுக்கு சென்று சேகரித்தோம். முடிவில் ஆவணப்படம் உருவானது.
இதற்கான மாவட்ட ஆட்சிதலைவர் நமக்கு அனுமதி கடிதம் அளித்தார். தொடர்ந்து அந்த படம் வெளியிடு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் செய்தி குறிப்பில் கீழ்கண்டவாறு கூறப்பட்டிருந்தது.
நாடு, சுதந்திரம் அடைந்து 75வது நினைவு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று அறியப்படாத தியாகிகளை பெருமைபடுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆவணப்படம் மற்றும் தியாகிகள் வாழ்ந்த இடங்களை பிரதிபலிக்கும் வரைபடத்தினை, மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், ஆவணப்படம் மற்றும் வரைபடத்தை வெளியிட காரணமாக இருந்த உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மற்றும் உதவியாக இருந்த முத்தலாங்குறிச்சி காமராசு, நெய்தல் ஆன்டோ மற்றும் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களை பாராட்டினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: 75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு,ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று வெளியுலகிற்கு அறியப்படாதவர்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் அதற்கு தேவையான நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக யூ டியூப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த வேளையில் தான் பரபரப்பான நிலையில் என்னுடைய பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும் என்ற நூல் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் மூலம் வெளியிடப்பட்டது.
( நதி வற்றாமல் ஓடும்)


