Skip to content
நிகழ்வுகள்
708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார்.
1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார்.
1306 – இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார்.
1409 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது.
1584 – சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார்.
1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.
1802 – பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே “உறுதியான அமைதி உடன்பாடு” எட்டப்பட்டது.
1807 – அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது.
1807 – சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.
1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1821 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் (யூலியன் நாள்காட்டியில் 1821 பெப்ரவரி 23 இல் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர் : வர்ஜீனியாவில் , கூட்டமைப்புப் படைகள் இசுட்டெட்மன் கோட்டையைத் தற்காலிகமாக அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1911 – நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1918 – பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1931 – இசுக்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர் : அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோசுலாவியா இணைந்தது.
1947 – அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.
1949 – எஸ்தோனியா , லாத்வியா , மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957 – மேற்கு செருமனி , பிரான்சு , இத்தாலி , பெல்ஜியம் , நெதர்லாந்து , லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965 – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4-நாள் 50-மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர் : பாக்கித்தான் இராணுவம் கிழக்கு பாகித்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975 – சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988 – செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
1996 – மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.
பிறப்புகள்
1347 – சியன்னா நகர கத்ரீன் , இத்தாலிய மெய்யியலாளர், இறையியலாளர், புனிதர் (இ. 1380 )
1914 – நார்மன் போர்லாக் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மனித நேயர் (இ. 2009 )
1920 – உசா மேத்தா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2000 )
1926 – கே. டானியல் , ஈழத்து எழுத்தாளர்
1927 – ப. சண்முகம் , புதுச்சேரி மாநிலத்தின் 13வது முதல்வர் (இ. 2013 )
1934 – குளோரியா இசுடீனெம் , அமெரிக்க பெண்ணியவாதி
1945 – ந. மணிமொழியன் , தமிழகத் தமிழறிஞர், தொழிலதிபர் (இ. 2016 )
இறப்புகள்
Continue Reading