பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.பயிற்சி வகுப்பின் ஆறாம் நாளான நேற்று வாழை நார் கொண்டு அழகிய கைவினைப் பொருள்களை தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அவர்கள் இப்பயிற்சியை தொடங்கி வைத்தார்.இப்பயிற்சியினை மகளிர் திட்டம் சார்பில் களக்காடு காஸ்டு நிறுவனத்தை சார்ந்த கோமதி,கலா,பிச்சமான்,செல்லப்பாண்டியன்,தங்கராஜ் ஆகியோர் நடத்தினர்.இப்பயிற்சியில் கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் , பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இன்று தேங்காய் ஒடு கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.


