ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்று சேர குளத்தில் புதிய கால்நடை மருத்துவமனை பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் நடந்த கால்நடை மானிய கோரிக்கையில் பேசிய ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடப்பு நிதியாண்டிலேயே சேரகுளத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பங்கேற்று பேசிய ஸ்ரீவைகுண்டம் தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொகுதிக்கு உட்பட கருங்குளம் யூனியன் ,சேரகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் உள்ள கால்நடைகள் நலன் கருதி சிகிச்சை அளிக்க ஏதுவாக சேரகுளத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் . இதை ஏற்றுக்கொண்டு பதிலளித்துப் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன் வளம் மீனவர் நலம் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வசி அமிர்தராஜின் கோரிக்கையை ஏற்று இந்த நடப்பு நிதியாண்டிலேயே சேரகுளத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.


