பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நாளும் ஒரு நன்னூல் என்ற தலைப்பில் நெல்லை டாக்கீஸ் சார்பில் செ. சங்கர் மணி பேசி வருகிறார். இதை பரணி டிவி , மயூரி டிவி ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. தினமும் இந்த நிகழ்ச்சியில் சதக்கப்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சௌந்திர மகாதேவன் ஒரு நூலை பற்றி பேசி வருகிறார். இந்த நிகழச்சியில் கடந்த 20.03.2022 அன்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூலைப்பற்றி பேசினார். அவர் பேசும் போது, “எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அரசு செய்யக்கூடிய ஒரு காரியத்தினை தனி மனிதராக உழைத்து செய்து முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் இந்த நூல். இந்த நூலில் அவர் வழக்கு தொடர்ந்தது முதல் ஆதிச்சநல்லூர் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த நீதியரசர் கிருபாகரன் முதல் அனைத்து நபர்களையும் மிகச்சிறப்பாக பட்டியலிட்டுள்ளார்” என்று பேசினார்.
அதன் கணொளியை இத்துடன் இணைத்துள்ளோம்.


