சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை விழா நடைபெற்றது.விழாவுககு கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தலைமை வகித்தார்.தொழில் நிர்வாகவியல் துறைப் பேராசிரியை மு.சண்முக சுந்தரி வரவேற்றார்.நுண்கலை மன்ற பொறுப்பாளரும்,வணிகவியல் துறைப் பேராசிரியை மா.சொர்ணபிரியா ஆண்டறிககை சமர்ப்பித்தார்.சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் ஆர்.எம்.பி.,சி.எஸ்.ஐ.,பி.எஸ்.கே. ராஜரத்திரம் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெ ஜெபசெல்வி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் நுண்கலை மன்ற சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி நடந்தது.அதில் இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி வி.அனுஷியா மிஸ் காலேஜ் சு0சுசுவாக தேர்ந்தெடுககப்பட்டார். கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுககு பரிசு வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறைப் பேராசிரியை ச. அன்சா நன்றி கூறினார்.


