வேளான் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டிற்கு 2.65 கோடி ஒதுக்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பாராட்டு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவர் டாக்டர் எஸ் ஜேd கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-தமிழ்நாடு அரசு பனையைப் பாதுகாப்பதற்காகவும் பனைத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது வரவேற்கத்தக்கது.மேலும் தற்போது 2022 – 23 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டிற்காக ரூபாய் 2.65 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வரவேற்க தக்கது. பனையைப் பாதுகாக்க பனையை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயம் பனையை வெட்டவேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற வேண்டும். பனை தொழிலாளர்களை மேம்படுத்த பனை பொருட்களை நியாய விலைக் கடைகளில் கொடுப்பதற்கு ஆணையிட்டடு தற்போது பனை பொருட்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பனைத்தொழில் மேம்படுத்துவதாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Attachments area


