கருங்குளத்தில் குளத்தில் பாய்ந்த கார். 3 குழந்தைகள் 2 பெண்கள் உள்பட 6 பேர் பத்திரமாக மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று திருநெல்வேலி மாவட்டம், பிராஞ்சேரியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மதியம் சுமார் 12 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் குளத்துக்கரைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு விழித்திருந்ததன் காரணமாக திடிரென்று தூங்கியுள்ளார். இதனால் கார் அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. காரில் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி. அத்தை மற்றும் மூன்று குழந்தைகள் சிக்கி கொண்டனர். குளத்தில் முழுவதும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து இருந்ததால் கார் அதில் சிக்கியது. உடனே அந்த வழியாகச் சென்றவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த ரோந்து போலிசார் மற்றும் பொதுமக்கள் 6 பேரையும் பத்திரமாக காரில் இருந்து மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


