கருங்குளம் அருகே கொங்கராயகுறிச்சியில் நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம் நடந்தது.முகாமில் கல்லூரி தாளாளர் பஹ்ஹீர் ரப்பானி தலைமை வகித்தார்.கொங்கராயகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆபிதா பானு, கொங்கராயகுறிச்சி ஜமாஅத் தலைவர் அப்துல் காதர், ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் தாமஸ், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், ஒன்றிய கவுன்சிலர் மைமூன் அப்துல் கரீம், அப்துல் சலாம்,பஞ்சாயத்து துணைத்தலைவர் சேர்ம துரை ,ஜமாஅத் துணைத் தலைவர் ஜனாப் அப்பாஸ் காசியார், வழக்கறிஞர் குணசேகரன், சமூக ஆர்வலர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திட்ட அலுவலர்கள் செய்யது அலி பாத்திமா,மாரியம்மாள், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, கொங்கராயகுறிச்சி என்எஸ்எஸ் முகாமில் பங்கேற்றுள்ள மாணவிகள் முகாம் மூலம் என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும், பெண்கள் சமூகத்தில் பெரிய பொறுப்புகளில் வரவேண்டுமென்றால் கல்வி மட்டுமே சாலச் சிறந்தது என்பது குறித்து மாணவிகளுக்கு பல விளக்கங்களை கூறி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியின் முடிவில் திட்ட அலுவலர் கீதா நன்றி கூறினார்.


