ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. 16 ந்தேதி துவங்கிய இந்த முகாமிற்கு அரசு உதவிப்பெறா பாடப் பிரிவுகள் துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா அவர்கள் தலைமை வகித்தார். ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர், முகைதீன் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் கனி, அரபாத் நகர் ஜமாத் தலைவர் அன்வர்ஷா, செயலாளர் அப்துல் காதர், வார்டு உறுப்பினர் இப்ராகீம், மக்கள் நலச் சங்கத் தலைவர் முகம்மது செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் முனைவர் அப்துல் ரகுமான் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். கல்லூரி தேர்வானையர் முனைவர் அப்துல் காதர், தமிழ்த்துறை முனைவர் அயூப்கான், ஆறாம்பண்ணை கவுன்சிலர் மைமூன் அப்துல் கரீம் உள்பட பலர் பேசினர். திட்ட அலுவலர் பேராசிரியர் முகைதீன் பிள்ளை தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் முனைவர் யூனூஸ் அகமது முகம்மது செரீப் நன்றி கூறினர்.


