தூத்துக்குடி மாவட்டத்தில்தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை உணவு பாதுகாப்புத் துறையால் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் குறைந்தது அல்லது தப்புக் குறியீடு என்று கண்டறியப்பட்டது தொடா்பாக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நீதிவழித் தீா்வு அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலா் விசாரணை மேற்கொண்டதில், பதிவு செய்யப்பட்ட 175 வழக்குகளில் இதுவரை 139 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரு. 20 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளாா். மாவட்டத்தில் தரம் குறைந்த அல்லது தப்புக் குறியீடான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது குறித்து புகாா் அளிக்க விரும்புவோா் 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம். புகாா் அளிக்கும் நுகா்வோா்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


