ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 125பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணி ஆணையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அழகு இணைந்து நடத்திய இளைஞர்களுக்காண வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அன்றோ(ஊராட்சி), ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவைகுண்டம ஊராட்சி ஒன்றிய தலைவர் வசந்தா முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்க வருகை தந்திருந்தனர்.
8ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தேர்வுசெய்யப்பட்ட 125 பேருக்கு ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உடனடியாக வேலை வாய்ப்புக்கான பணி ஆணையை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
வட்டார இயக்க மேலாண்மை அழகு அலுவலர் வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயா, மகேஸ்வரி, ஜெயலட்சுமி , வள்ளியம்மாள், உமா, கனி , பினாரிடா, திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், திமுக சண்முகசுந்திரம், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயசீலன், பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன், மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், காங்கிரஸ் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தாசன்,எஸ்.சி. எஸ்.டி பிரிவு வட்டத்தலைவர் லட்சுமணன்,ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு , நகர தலைவர் கருப்பசாமி, சித்திரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பிச்சைகண்ணன், பொன்னங்குறிச்சி சுடலை, நகர இளைஞரணி தலைவர் மகாராஜன், நகர துணைத் தலைவர் புகாரி, வட்டாரச் செயலாளர் மதிசேகரன், நகர செயலாளர் நிலமுடையான், நகர பொருளாளர் சொரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


