வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தின வழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக கருவுற்ற தாய்மார்களிடையே காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார வெங்கடேசன், முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சாகிர் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் அதை தொடர்ந்து வாசித்து காசநோயாளிகளை ஒதுக்கி வைக்காமல், அன்புடன் அரவணைத்து ஆறுதல் அளித்து காசநோய் ஒழிப்பதற்கான நமது போராட்டத்தை துரிதப்படுத்தி “காசநோய் இல்லாத தூத்துக்குடியை 2025க்குள் உருவாக்குவோம்” என உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆய்வக நுட்பநர்கள் ராஜேஸ்வரி, உஷாராணி, செவிலியர் திருமதி தங்க முத்துகுமாரி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் வேம்பன், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் அய்யம்மாள் அவர்கள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹிம் ஹீரா செய்திருந்தார்.


