தூத்துக்குடியில் கணவரை ஹெல்மெட்டால் தாக்கியதாக மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 4பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு அமிர்தவிளை நகரைச் சேர்ந்தவர் இசக்கி மகன் பாலஈஸ்வரன் (39). இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் தங்க ரேவதி (32) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. பாலஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அவர் 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் சம்பாதித்த ரூ.50 லட்சம் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைத்திருந்தாராம். இந்நிலையில் கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர் மனைவியிடம் பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் ஏரல் ஆரம்ப சுகாதரா நிலையத்தில் டாக்டராக வேலைபார்த்து வரும் தனது அண்ணன் மகா காசிராஜனிடம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்டதால் தங்கரேவதி, அவரது அண்ணன் மகா காசிராஜன் (35), தம்பி பாலஹரிகரன் (20), தந்தை சூரிய கணேஷ் (50) ஆகியோர் பால ஈஸ்வரனை ஹெல்மெட்டால் தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மனைவி உட்பட 4பேர் மீது தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


